» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:59:42 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம், ஹோலி கிராஸ் பள்ளியின் பின்புறம் உள்ள பகுதி, சண்முகபுரம் பத்ரகாளியம்மன் கோயில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள பகுதிகள் சண்முகபுரம் பிராப்பர் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் உட்பட பலர் உடனிருந்தனர்.