» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டையபுரம், விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 12:54:56 PM (IST)
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எட்டையபுரம், விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2022-ம் ஏற்கனவே த்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென சொத்துவரி 6% உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக காரணமாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சியில் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலையில் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது திமுக அரசின் 6% சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளத்தில்
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஏற்பாட்டில், திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே பெருமாள், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், காந்தி காமாட்சி, ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் வரதராஜ பெருமாள், தேவேந்திரன், புதூர் கவுன்சிலர் பெருமாள்சாமி, கண்ணன், வேல்முருகன், ஆனந்த, மகளிர் அணி பிரியா, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.