» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கத்தி முனையில் செல்போன் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:49:20 AM (IST)
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி கோவில் பூசாரியிடம் செல்போன் பறித்த 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அயல் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ராஜகோவிந்தசாமி (35) இவர் அங்குள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு உள்ள ஒரு கோவில் முன்பு வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை பறித்துசென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ராஜா கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்.