» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஊர்க்காவல்படை பணியிடம் : பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 7, அக்டோபர் 2024 3:55:59 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல்படை துணை வட்டார தளபதி பணியிடத்திற்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி (1-பெண்) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட சேவை மனப்பான்மையுடன் கூடிய பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் படிப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், வயது நிருபணத்திற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் 17.10.2024 ம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் மற்றும் வேலை / தொழில் விபரத்துடன் கூடிய சுய விபரக் குறிப்பு (Bio - Data), சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.