» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 7, அக்டோபர் 2024 3:50:24 PM (IST)
தூத்துக்குடி 43வது வார்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநகராட்சி ஆணையருக்கு விடுள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி 43 வது வார்டு முனியசாமிபுரம் 2ம் தெரு மையப் பகுதியில் 8 இன்ச் AC மெயின் கடந்த 6 மாத காலமாக உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அங்கு போடப்பட்டுள்ள புதிய சாலையும் சேதமடைந்து வருகிறது. காமராஜ் கல்லூரி மெயின் ரோட்டில் உள்ள மெயின் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 6 மாத காலமமாக சரி செய்யப்படாமல் உள்ளது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்ப்படுகிறது. உரிய அதிகாரிகளிடம் சிபிஎம் 43 வது மாமன்ற உறுப்பினர் முத்து மாரி பல முறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய தலையீடு செய்து சரி செய்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.