» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோரம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது : பொதுமக்கள் எதிர்ப்பு!
திங்கள் 7, அக்டோபர் 2024 11:49:01 AM (IST)
கோரம்பள்ளம் ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரம்பள்ளம், அய்யனடைப்பு, முள்ளக்காடு ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நூற்றுக் கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், "எங்கள் ஊராட்சியை மாநகராட்சியாக இணைப்பதாக செய்தி வெளியாகி உள்ளதாக அறிந்தோம். அய்யனடைப்பு ஊராட்சி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் நிறைந்த பகுதியாகும். அவர்களின் வாழ்வாதாரம் விவசாயம்,கூலி வேலை மற்றும் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை மட்டுமே.
அவ்வாறு இணைக்கும் பச்சத்தில் நான் முதல்வர் திட்டம், கலைஞர் கனவு வீடு மக்களுக்கு பரிபோகும் நிலை ஏற்படும். குடிநீர் கட்டணம், வீட்டுவரி கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் அதிகம் வசிக்கும் பஞ்சாயத்து மக்களின் நலன் கருதி மேற்படி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட்டு மீண்டும் பஞ்சாயத்தாகவே தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.