» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தனி பிரிவு இன்பெக்டர் பொறுப்பேற்பு
திங்கள் 7, அக்டோபர் 2024 11:39:47 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட தனி பிரிவு இன்ஸ்பெக்டராக உமையொரு பாகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பேச்சிமுத்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த உமையொருபாகம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட தனி பிரிவு இன்ஸ்பெக்டராக உமையொரு பாகம் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜானை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.