» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செங்கலால் தாக்கி கொலை மிரட்டல்: 4பேர் கைது!
திங்கள் 7, அக்டோபர் 2024 11:25:03 AM (IST)
கோவில்பட்டியில் 2பேரிடம் தகராறு செய்து, செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தி தோப்பு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வேல்முத்து மகன் முத்துசெல்வம் (24). இவரது நண்பர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (49). இவர்கள் இருவரும் மந்திதோப்பு ரோட்டில் நின்று பேசிக் காெண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் ராஜகுரு (24) என்பவர் அவர்களிடம் தகராறு செய்தாராம்.
மேலும், ராஜகுரு மற்றும் அவரது நண்பர்கள் கருப்பையா மகன் அர்ஜுன் (22), ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (24), ராமசாமி மகன் லட்சுமணன் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்து செல்வம் மற்றும் மாரியப்பனை செங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி வழக்குப் பதிந்து, அர்ஜுன், ராஜகுரு, சுபாஷ், லட்சுமணன் ஆகிய 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.