» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் 11-ஆம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

திங்கள் 7, அக்டோபர் 2024 8:50:48 AM (IST)

தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களி்ல வருகிற 11-ந் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்க கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வடகுத்து பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீட்டர் மழை பதிவானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 12 செ.மீட்டர், சேலத்தில் 11 செ.மீட்டர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஆலங்குடியில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவானது.

தற்போது, தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோர பகுதிளை ஒட்டிய மத்திய மேற்கு-தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (செவ்வாய்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை. கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற 9-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற 10-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் வருகிற 11-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory