» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசுப் பேருந்து டயர் வெடித்து விபத்து: பயணிகள் காயமின்றி தப்பினர்!
திங்கள் 7, அக்டோபர் 2024 8:35:51 AM (IST)
தூத்துக்குடியில் அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, எட்டயபுரம் சாலையில் வந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் வராததால், ஓட்டுநர் லாவகமாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதனால், பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் மாற்றுப் பேருந்து மூலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.