» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது : கடம்பூர் செ.ராஜூ பேச்சு

ஞாயிறு 6, அக்டோபர் 2024 6:36:09 PM (IST)



செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் கையில் தான் திமுக உள்ளது என்று அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில் "பிறப்பால் பதவி கிடைப்பது திமுக, உழைப்பால் பதவி கிடைப்பது அதிமுக இது தான் அதிமுக - திமுக இடையே உள்ள வித்தியாசம். கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின்,கருணாநிதி பேரன் , மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்ற பிறப்பால் பதவிக்கு வந்தனர்.

மருத்துவத் துறையில் அதிக சாதனைகள் நிகழ்த்தி அதிக விருதுகளை பெற்றுத்தந்த ஒரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தான்ஃதற்போதைய மருத்துவதுறை அமைச்சர் ம.சு. - மாசு ஏற்படுத்தி விட்டார் .சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மருத்துவ துறையை கெடுத்து, மக்களின் வாழ்வினை கெடுத்து கொண்டிருக்கிறார்

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார்.அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருந்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது .தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட கொண்டு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விட்டது,ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றார்கள் அதை நிறைவேற்றவில்லை. 

ஒரு செங்கலை தூக்கி கொண்டு அலைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு - செங்கல் நிதி என்று மக்கள் அழைக்கின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் 39 எம்.பிக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை, செந்தில் பாலாஜி மீது பயத்தினால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் அமைச்சர் வழங்கி உள்ளனர். செந்தில் பாலாஜி கெட்டிக்காரர் தான், அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் தான் திமுக உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory