» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நிலத்தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி : உறவினர் கைது!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 11:46:51 AM (IST)
தூத்துக்குடியில் நிலத்தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியில் வசிப்பவர் அங்குசாமி மகன் பரமசிவம் (40). சுந்தரவேல் புரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் பாக்கியராஜ் (55). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது.
நேற்று பரமசிவம் எட்டையபுரம் ரோட்டில் உள்ள பைக் ஷோரூம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாக்கியராஜ் தனது நண்பரான கிருஷ்ணராஜ புரத்தை சேர்ந்த குருசாமி மகன் முத்துக்குமார் (45) என்பவருடன் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம்.
இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பாக்கியராஜ் கைது செய்தார். அவரது நண்பரான முத்துக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.