» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 11:40:52 AM (IST)
ஏரல் அருகே தடுப்பணையில் குளித்தபோது, நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல், அம்புரோஸ் நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் மகன் அந்தோணி சேவியர் ஆல்வின் (27), இவர் வாழவள்ளான் அருகில் உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.