» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அகல ரயில்பாதை பணிகள் : 1ஆம் கேட் நாளை மூடப்படுகிறது!

வெள்ளி 4, அக்டோபர் 2024 8:24:49 PM (IST)

தூத்துக்குடியில் அகல ரயில்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (அக்.5) காலை 10.30 மணி மாலை 5 மணி வரை 1வது ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுரை-தூத்துக்குடி இரயில்வே அகல இரட்டை பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பெரிய பயணிகள் ரயில் நிறுத்தம் செய்வதற்கு வசதியாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பிளாட்ஃபார்ம் எண் (1) 65 மீட்டர் நீட்டிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இப்பணிகளுக்காக ரயில்வே லெவல் கிராசிங் கேட் எண் 487 (தூத்துக்குடி முதல் கேட்) அருகில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் ரயில்வே பாயின்ட் கிராசிங்கை அகற்றி, அதை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (அக்.5) காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory