» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்ற சிபிஎம் கோரிக்கை!
வெள்ளி 4, அக்டோபர் 2024 4:37:38 PM (IST)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை மக்கள் பயன்படுத்திடும் வகையில் ஊரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை அண்ணாநகர், ராஜீவ் நகர், பால்பாண்டிநகர், தபால் தந்தி நகர், கதிர்வேல்நகர், முத்தம்மாள் காலனி, சின்ன கண்ணுபுரம், பாலையாபுரம், எட்டையாபுரம் ரோடு மேற்குப் பகுதி ஆகிய சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தும் வகையில் ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும்.
தற்போது இரவு நேரங்களில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மக்கள் எளிதில் செல்லும் வகையில் மையப்பகுதியான அண்ணாநகர் (அ) 4 ம் கேட் பகுதியில் காவல் நிலையத்ததை அமைத்திட தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.