» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டீக்கடைக்காரர் கொலை வழக்கில் நண்பர் கைது : மது போதையில் வெறிச்செயல்
வெள்ளி 4, அக்டோபர் 2024 12:23:34 PM (IST)
தூத்துக்குடியில் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் டீக்கடைக்காரரை வெட்டி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் சாலை சந்திப்பு பகுதியில் ஞானராஜ் மகன் ஜெயசுந்தர் (64) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், இரவில் டீக்கடையிலேயே துாங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், டீக்கடையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயசுந்தர் தனது நண்பரான தெற்கு வீரபாண்டிய புரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தூர் பாண்டி (60) என்பவரும் தினமும் டீக்கடையில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று இரவு மதுகுடிக்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்ட்டுள்ளது. இதில் செந்தூர்பாண்டியை ஜெயசுந்தர் தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தூர்பாண்டி, நள்ளிரவில் தூங்கிக் தூங்கிக் கொண்டிருந்த ஜெயசுந்தரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.