» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புத்தக திருவிழாவில் முத்தமிழ் முத்துக்கள்

வெள்ளி 4, அக்டோபர் 2024 10:19:46 AM (IST)



தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவில்  முத்தமிழ் முத்துக்கள் படைப்பாளிகளை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. 

தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக முத்தமிழ் முத்துக்கள் படைப்பாளிகளை பற்றிய கருத்துக்கள் நிகழ்வுகள் ஓவியருடன் கலந்துரையாடல் என முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி ரொட்டீசியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்புரை வழங்கினார். 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்க ஓவியர் வள்ளிநாயகம் படைப்பும் பகிர்ந்தலும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முத்தமிழ் முத்துக்கள் அரங்கில் படைப்பாளிகளை வரைந்தும் காட்சிப்படுத்தியும் முத்து அரங்கத்திற்கு புதிய வடிவத்தினை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலோடு செயல்படுத்திய சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்கத்தின் ஓவியர் வள்ளிநாயகம் குறித்து எழுத்தாளர்களோடும் மாணவர்களோடும் பொதுமக்களோடும் வாசகர்களோடும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை தேவன் கவிஞர் எழுத்தாளர் மாரிமுத்து கவிஞர் செல்வராஜ் கவிஞர் மூக்கு பேரி தேவதாசன் கவிஞர் எழுத்தாளர் புலவர் முத்துசாமி, மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், நூலகர் பிரம நாயகம் மாணிக்கவாசகம் சாரதா அருணாசலம் மேரி ரெஜினா விஜயலட்சுமி லதா மணிகண்டன் சையது முகம்மது ஷெரிப் தங்கதுரையரசி பிரியதர்ஷினி ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வரும் நாட்களில் புத்தக வெளியீடு எழுத்தாளர்களுடன் பயிற்சிகள், நடத்தி இளம் படைப்பாளர்களை உருவாக்கவும் ஊக்கம் இடவும் ஆலோசிக்கப்பட்டது. 

அரங்க நிகழ்வுகள் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் வாசகர்களுக்கும் புதுமையான அனுபவங்களையும் இதுவரை அறிந்திராத ஆளுமைகளை பற்றி தெரிந்து கொண்டதில் பலவித ஆச்சரியங்களையும் தந்ததாக புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த கல்லாரி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். ஐந்தாவது புத்தக திருவிழாவிற்கு அணி சேர்த்த முத்திரை பதிக்கின்ற இந்நிகழ்வு முத்து அரங்கில் தொடர்ந்து நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory