» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்!
வியாழன் 3, அக்டோபர் 2024 8:01:52 PM (IST)
டி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் சாகுபுரம் அரிமா சங்கம் சார்பில் ஆளுநர் வருகையை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
டி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் சேவை அமைப்பான சாகுபுரம் அரிமா சங்கத்தின் சார்பில் சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் வைத்து 324A மாவட்ட அரிமா சங்க ஆளுநர் அதிகார பூர்வ வருகை தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் உமரிக்காடு மற்றும் அழகப்பபுரம் கிராமங்களில் 2 உயர்கோபுர மின் விளக்குகள் நிறுவப்பட்டன.
நடைபாதை வியாபாரிகளுக்காக 5 நிழற்குடைகள், மூன்று சக்கா சைக்கிள், 2 மிதிவண்டி, 4 தையல் இயந்திரங்கள், பெண்களுக்கான 20 சேலைகள், கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ உதவி தொகைகள் வழங்கப்பட்டன. பேய்குளம் தொழுநோய் மருத்துவனையில் உள்நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு மாவட்ட அரிமா சங்க ஆளுநர் டாக்டர் அய்யாதுரை தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கினார்.
விழாவில், டி.சி.டபிள்யூ., நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் எஸ்.சுரேஷ் அகியோரின் வழிகாட்டுதலின் படி, அரிமா நிர்வாகிகள் பெலிக்ஸ் கிளாட்சன், பொன் சரவணன், ஆர்ஜே ஒயிட்பீல்ட் ஆர்தர், முத்துபாண்டியன், கேஎம் சுப்பிரமணியன், வி.இராம சுப்பிரமணியன், தாமஸ் மாசில்லாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவினை அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் தொடர்பு துறை துணை பொதுமேலாளர் ஜி.பிரகாஷ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.