» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3 ஆண்டுகளில் 2500 சாலை பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!
வியாழன் 3, அக்டோபர் 2024 3:53:21 PM (IST)
தூத்துக்குடியில் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளன என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (அக்.3) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசும்போது, "கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக தூத்துக்குடியில் எந்த சாலைகளும் போடவில்லை. கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் நமக்கு ஒரு பாடம். காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தின் அளவை கணக்கிட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் குறைகளை போன் மூலம் தெரிவித்தால் போதும், அதிகாரிகளே இல்லம் தேடி வந்து குறைகளை தீர்த்து வைப்பார்கள். அந்த திட்டம் விரைவில் செயல்படு்த்தப்படும். தூத்துக்குடியில் நடைபெறும் புத்தக கண்காட்சினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆணையர் மதுபாலன், துணை பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் பொ நரசிம்மன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ஜார்ஜ் ரோடுOct 4, 2024 - 09:00:28 AM | Posted IP 162.1*****
சாலை அமைத்த பிறகு சிறு சேதங்கள் இருந்தால் கண்டுக்க மாட்டானுங்க, அந்த சேதமடைந்த சாலைகள் போக போக பெரிய பள்ளமாக மாறினால் தான் கன்டுபிடிப்பானுங்க, இவர்கள் என்ன மாதிரி மனிதர்கள்? சாலையை பாதுகாக்க சட்டம் கொண்டு வரணும்
கந்தசாமிOct 3, 2024 - 05:06:54 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் 2500 சாலைகள் இல்லை
raamOct 3, 2024 - 04:36:40 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி மாநகராட்சியில மொத்தமே 610 ரோடு தானப்பா இருக்கு இதுல புதுசா எங்கிருந்து வந்தது 2500ரோடு நெல்லை, மதுரை மாநகராட்சிக்கும் சேர்த்து ரோடுபோட்டிங்களாப்பா
podhu janamOct 7, 2024 - 04:01:26 PM | Posted IP 172.7*****