» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல காவல் துறையினர் பதக்கங்கள் வென்று சாதனை!

வியாழன் 3, அக்டோபர் 2024 8:55:29 AM (IST)

மாநில அளவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் பயிற்சி மேற்கொண்ட தென்மண்டல காவல்துறையினர் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் கடந்த 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 37 காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
 
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  முத்து பிஸ்டல் ரக துப்பாக்கி ரக பிரிவிலும், திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த தலைமைக் காவல்ர்  சுந்தரமூர்த்தி ரைபிள் ரக சுப்பாக்கி பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்  ராஜகுரு கார்பைன் ரக துப்பாக்கி பிரிவிலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்  பிரியா ரைபிள் ரக துப்பாக்கி பிரிவிலும் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கமும்,

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  முத்து பிஸ்டல் ரக பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர்  ராஜகுரு கார்பைன் ரக துப்பாக்கி  பிரிவிலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் தர்மதுரை ரைபிள் ரக துப்பாக்கி பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மகாராஜா ரைபிள் ரக துப்பாக்கி பிரிவில் வெள்ளி பதக்கமும்,

தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த முத்துலட்சுமி பிஸ்டல் மற்றும் ரிவால்வர் ரக துப்பாக்கி பிரிவிலும், காவலர் ரம்யா கார்பைன் ரக துப்பாக்கி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று வெற்றி பெற்றுள்ளனர். மேற்படி தென்மண்டலம் சார்பாக கலந்து கொண்ட காவல்துறையினர் தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டு, மேற்படி போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory