» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது : மாப்பிள்ளையூரணி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

வியாழன் 3, அக்டோபர் 2024 8:44:26 AM (IST)



மாப்பிள்ளையூரணியை தூத்துக்குடி மாநகராட்சியுடன்  இணைக்கக் கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மேலஅழகாபுரியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனா்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது, உப்பாத்து ஓடையில் உள்ள அமலைச்செடிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, மேலஅழகாபுரி ஊா் தலைவா் பாலசுந்தரம், வழக்கறிஞா்கள் மாடசாமி, சண்முக சுந்தரராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா் வசந்தகுமாரி, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து

Peter KoilrajNov 24, 2024 - 08:54:50 AM | Posted IP 162.1*****

Please First patta vanki kodunka makkaluku....

ரமாOct 6, 2024 - 01:58:44 PM | Posted IP 162.1*****

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைப்பதே சிறந்தது. நல்ல ரோடு வசதி இல்லை, குப்பைகள் அகற்ற சரியான வசதிகள் இல்லை, காசு அதிகம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை, இவையெல்லாம் மாற வேண்டும் என்றால் மாநகராட்சியுடன் இணைப்பதே சிறந்த வழி

பார்வதிOct 6, 2024 - 09:29:06 AM | Posted IP 172.7*****

மாநகராட்சி உடன் இணைப்பதே சிறந்தது.. கண்டிப்பாக முன்னேற்றம் வரும்.

RajOct 5, 2024 - 09:37:25 PM | Posted IP 162.1*****

Most people like to municipality

சோழன்Oct 5, 2024 - 01:02:43 PM | Posted IP 162.1*****

ஊராட்சி யாக நீடித்தால் தான் எளிய மக்களுக்கு நல்லது மாநகராட்சி ஆனால் வீடு கட்ட பிளான் அப்ரூவல் என சமாளிக்க முடியாது வரி வேறு பன்மடங்கு கூடி விடுமே

அபிOct 5, 2024 - 10:28:17 AM | Posted IP 162.1*****

மக்கள் கஷடப்படுக்குறாங்க கண்டிப்பா

மாநகராட்சி ஆக வேண்டும் கண்டிப்பா ஆக வேண்டும்Oct 5, 2024 - 10:27:59 AM | Posted IP 172.7*****

மக்கள் கஷடப்படுக்குறாங்க கண்டிப்பா

வெற்றி வேல்Oct 5, 2024 - 06:46:14 AM | Posted IP 172.7*****

மாநகராட்சியோடு இணைத்தால் ஒருகுடம் 8 ரூபாய்க்கு விற்க்கப்படும் தண்ணீர் வியாபாரம் பாதிக்கப்படும், நிலத்தீர்வையை புதுப்பிக்க அல்லது கணிணியில் ஏற்ற 15000 ரூபய் தலைவருக்கு கிடைக்காது... குறிப்பாக குப்பைக்குள் குடியிருக்கும் சுகம் கிடைக்கவே கிடைக்காது... அதனால் மாப்பிளை (ஊரணி) கு.. கழுவ கூட தண்ணீர் இல்லாமல் கண்ட இடத்தில் மலம் கழிக்கும் இடமாக இருப்பதுதான் பெருமைக்குரிய விடயம்.

Pommu duraiOct 5, 2024 - 06:23:52 AM | Posted IP 162.1*****

மாநகராட்சி இணைவதே நல்லது

ThalavaimuthuOct 4, 2024 - 09:58:45 PM | Posted IP 162.1*****

Mostly people like to municipality Go to the next levels.

Arumugam ,thresh Nagar area peopleOct 4, 2024 - 07:26:00 PM | Posted IP 172.7*****

Selfish panchayat president very poor administrative

ArumugamOct 4, 2024 - 07:22:20 PM | Posted IP 162.1*****

சிலர் சொந்த லாபத்தை மட்டும் பார்க்கும் panchayat president

PremaOct 4, 2024 - 05:52:25 PM | Posted IP 162.1*****

தயவு செய்து மாநகராட்சியுடன் இணையுங்கள்.. பக்கத்து வீட்டில் சென்று தண்ணீர் எடுக்கும் நிலை மாற வேண்டும்.. பக்கத்து வீட்டில் இருந்து மாநகராட்சி ஆரம்பமாகிறது.. ஒரு சில நேரங்களில் பக்கத்து தெருவிற்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டியதாக உள்ளது...

KarthikkumarOct 4, 2024 - 01:07:10 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி ஆவதில் எனக்கு மகிழ்ச்சியே... அப்படியாவது எங்களுடைய தெருவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைப்பார்களா..?

S, JOHNSON JAYAKUMAROct 4, 2024 - 12:28:57 PM | Posted IP 172.7*****

எத்தனை நாளைக்கு தான் பஞ்சாயத்து தண்ணி செம்மண் கலர்ல வருது மாநகராட்சி ஆனால் வல்லநாடு தண்ணீர் வரும் அல்ல ஒரு நாளைக்கு இரண்டு குடம் தண்ணி அக்குவாவற்று வாங்க இருபது ரூபா மாதம் 600 ரூபா ஆகிறது ஆறு மாசத்துக்கு 3600 ஆகிறது வருஷத்துக்கு 7200 ஆகிறது எதுக்கு ரெண்டு தேவையா 500 500 1000 ரூபாய் தான் வீடு திரும்ப கூடும் இதை கட்டிட்டு போக வேண்டியது தானே இன்னும் பின்னோக்கியே செல்வதற்கு ஏன் ஆசைப்படுகிறீர்கள் மாநகராட்சி ஆனால் நல்ல தண்ணி வரும் எல்லா வசதிகளும் வரும் ஏன் அது தெரியாம இருக்கிறது

UNMAIOct 3, 2024 - 11:17:32 AM | Posted IP 162.1*****

THAVARU SEYYADHEERGAL MANAGARATCHIYUDAN INAITHAL DHAN NALLADHU

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory