» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருங்குளத்தில் பழுதான காந்தி சிலை சீரமைப்பு
புதன் 2, அக்டோபர் 2024 8:59:11 PM (IST)
கருங்குளத்தில் 25 வருடங்களுக்கு முன்பு பழுதான காந்தி சிலை சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பிள்ளையார் கோயில் அகில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு காந்தி மண்டபம் ஒன்று இருந்தது. இந்த மண்படத்தில் காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காந்தி ஜெயந்தி விழாவிற்கும் இந்த மண்படத்தில் காந்திக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.
இதற்கிடையில் இந்த மண்டபம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. சிலை சிதிலமடைந்தது. இந்த சிலையை சீரமைத்து மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்த கோரிக்கை விடுவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதற்கிடையில் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் இதற்காக முயற்சி எடுத்தார்.
உள்ளூரில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களிடம் வசூல் செய்து இந்த மண்டபத்தினை கட்ட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் துபாயில் வசித்து வரும் கருங்குளத்தினை சேர்ந்த பெருமாள், ராமசுப்பு தேவர், மகராஜன் ஆகியோர் இணைந்த மண்டபத்தினை கட்டி கொடுத்தனர். கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் புதிய சிலையை நிறுவிக்கொடுத்தார்.
இதன் திறப்பு விழா இன்று 02.-10.-2024 காந்தி ஜெயந்தி முன்னிட்டு காலை 11.00 மணிக்கு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர், ராமசுப்புதேவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்கிருஷ்ணன், கிராம மக்கள் நலக்குழு தலைவர் உடையார், திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், தங்கவேல் டெய்லர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நம்பி, கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி கிளார்க் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கிராம பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டமும் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் தலைமையில் பலநடந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.