» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபானக் கடை வரவே கூடாது : கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி!
புதன் 2, அக்டோபர் 2024 8:01:07 PM (IST)
விளாத்திகுளம் அருகே மாவில்பட்டி கிராமத்தில், மதுபான கடை மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் வரக்கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாவில்பட்டி கிராமத்தில், மாவில்பட்டி ஊராட்சி சார்பில், மாவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் தலைமையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது, தற்போது விருதுநகர் மாவட்டத்தில் புதிய பட்டாசு ஆலைகளுக்கு அரசு அனுமதிப்பதில்லை, விருதுநகர்-தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாவில்பட்டி கிராமத்தில் இன்னும் வருங்காலத்தில் தனியார் பட்டாசு ஆலை நிறுவனங்கள், பட்டாசு ஆலைகளை நிறுவ முயற்சித்து வருகின்றனர், ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் போதிய பாதுகாப்புடன் இருக்கும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன,
ஆனால் இது கிராமப் பகுதி இங்கு உரிய பாதுகாப்பு இருக்காது, எனவே நமது கிராமத்திற்கு புதிதாக பட்டாசு நிறுவனங்கள் வர அனுமதிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதேபோல் அரசு மதுபான கடை நமது பகுதியில் அமைந்தால்,நமது பகுதி ஆண்கள் காலையில் விவசாய பணிக்கு செல்லாமல் மதுபானை கடை நோக்கி படையெடுக்கும் சூழ்நிலை ஏற்படும்,
விவசாய பணிகள் பாதிக்கும் எனவே மதுபான கடையும் வரக்கூடாது எனவும், அதேபோல் விவசாய பணிகள் தற்போது தொடங்க உள்ளது, இந்நிலையில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களை மான், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு விலங்குகளிடம் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் காக்கும் வகையில் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.