» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்!

புதன் 2, அக்டோபர் 2024 3:48:57 PM (IST)



தூத்துக்குடியில் தூய மரியன்னை பெண்கள் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியில் இயங்கி வரும் Anti Drug Cell போதைப் பொருட்கள் தடுப்பு குழு, AMMM அமலோற்பவ மாதா மதுவிலக்கு இயக்கம், YRC இளைஞர் செஞ்சிலுவை சங்கம், AICUF அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு, மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இளம்பெண்கள், இளைஞர்கள் மாணவர்கள் ஒன்றிணைந்து மது போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒரு முயற்சியாக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி தூய மரியன்னை கல்லூரி முன்பாக புறப்பட்டு கால்டுவெல் பள்ளி பின்புறமாக தொடர்ந்து புனித பேட்ரிக் ஆலயம் வழியாக இரயில்வே ஒன்றாம் கேட் அருகாமையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே ஒன்றுகூடி போதை பொருட்கள் தடுப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் தலைமையில் ஏற்று நிறைவு பெற்றது.

பேரணியில் காந்திய மக்கள் இயக்கம் ஜேசுதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தூத்துக்குடி மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவும் மற்றும் மறைமாவட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழுவினர் கலந்து கொண்டனர். 

பேரணி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜெசி பெர்னான்டோ, செயலர் ஷிபானா, துணை முதல்வர் எழில் அரசி, இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி, மாணவியர் விடுதி இயக்குநர் குழந்தை தெரஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர் பேரவையினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory