» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிராம சபை கூட்டத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் புறக்கணிப்பு? சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!

புதன் 2, அக்டோபர் 2024 3:30:16 PM (IST)

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. குழந்தைகள் நலத்துறை  அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையை சார்ந்த அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். கோரம்பள்ளம் பஞ்சாயத்து சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் விவாதங்கள் எதுவுமே நடைபெறாமல் பெருவாரியான கல்லூரி மாணவர்களையும் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை வைத்து மட்டுமே தீர்மானம் புத்தகத்தில் கையெழுத்தை மட்டும் பெற்றுள்ளார்கள். 

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு இதுவே போதுமானது என்றால் பொதுமக்கள் எதற்கு? விவாதங்கள் எதற்கு ? மினிட்ஸ் புத்தகம் எதற்கு? அரசு சார்ந்த மற்ற அதிகாரிகள் எதற்கு? தீர்மானத்தை வாசிக்கும் போது கூட பலருக்கு கேட்கவில்லை? வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாமலேயே கிராம சபை தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? சாத்தியம்தான் என்பதைப் போல கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்து விட்டார்கள். மீண்டும் கோரம்பள்ளம் கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றத்தை தான் நாட வேண்டுமா? என்று சமூக ஆர்வலர் ச.பாலா என்ற பாலசந்தர் குற்றம்சாட்டியுள்ளார். 


மக்கள் கருத்து

Noorul ameenOct 2, 2024 - 04:10:41 PM | Posted IP 162.1*****

சரிங்க சார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory