» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக வெற்றிக்கழக மாநாடு அழைப்பிதழ் வைத்து தூத்துக்குடியில் கட்சியினர் வழிபாடு!
புதன் 2, அக்டோபர் 2024 12:39:50 PM (IST)
தூத்துக்குடியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ வழிபாட்டு தலங்களில் தமிழக வெற்றிக்கழக மாநாடு அழைப்பிதழ் வைத்து கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடுக்கான அழைப்பிதழை தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் தலைமையில் கட்சியினர் சிறப்பு ஜெபம் செய்தனர்.
பின்னர், பழமை வாய்ந்த சிவன் கோவிலில் அழைப்பிதழ் வைத்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மேட்டுப்பட்டியில் உள்ள தர்காவில் மாநாட்டு அழைப்பிதழ் வைத்து சிறப்பு துவா செய்தனர். இதில் ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.