» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டீக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 2, அக்டோபர் 2024 11:58:45 AM (IST)
தூத்துக்குடியில் டீக்கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம், மீளவிட்டான் சந்திப்பு ரோட்டில் ஞானராஜ் மகன் ஜெயசுந்தர் (64) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கமாக அவர் இரவு நேரத்தில் கடையிலேயே தங்கி விடுவார்.
இந்நிலையில் இன்று காலை ஜெயசுந்தர் வெட்டுக் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு அப்பகுதியில் சிலர் மது குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அதனை தட்டிக் கேட்டதால் ஜெயசுந்தர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழன்Oct 2, 2024 - 12:37:03 PM | Posted IP 162.1*****