» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை கவிநேசன் எழுதிய சட்டம் சந்தித்த பெண்கள் ஆங்கில நூல் அறிமுகம்!

புதன் 2, அக்டோபர் 2024 11:45:50 AM (IST)



செய்துங்கநல்லூரில் நெல்லை கவிநேசன் எழுதிய "சட்டம் சந்தித்த பெண்கள்" என்னும் ஆங்கில நூல் அறிமுக விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவடத்தினை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நெல்லை கவிநேசன். இவர் பெண்கள் சட்டம், கல்வி உள்பட சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 37 வருடங்களுக்கு முன்னால் எழுதிய தமிழ் நூல், சட்டம் சந்தித்த பெண்கள். 1987 பார்த்திபன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த நூலை பேராசிரியர் ஆழ்வார் ஆங்கில நூலாக்கியுள்ளார்.

பேராசிரியர் ஆழ்வார், நெல்லை கவிநேசனின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்துக்கது. இந்த நூலை செய்துங்கநல்லூரில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் அறிமுகம் செய்தார். எழுத்தாளர் காமராசு செல்வன் உடன் இருந்தார்.

இந்நூலை பற்றி நெல்லை கவிநேசன் கூறும்போது, "ஒரு எழுத்தாளனுக்கு பெருமை தனது நூல் பல்வேறு மொழிகளில் வருவது ஆகும். என்னுடைய சட்டம் சந்தித்த பெண்கள் நூல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலை எனது ஆசிரியர் பேராசிரியர் ஆழ்வார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூலை குமரன் பப்பளிகேசன் வெளியிட்டு உள்ளது. எனது நூலை எனது ஆசிரியரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருப்பது எனக்கு சந்தோசத்தினை தருகிறது"  என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory