» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் : 3 இளம்பெண்கள் மீட்பு
புதன் 2, அக்டோபர் 2024 8:47:43 AM (IST)
தூத்துக்குடி ஸ்பா மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி வி.வி.டி. ரோட்டில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார், அந்த மையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு இருந்த 3 இளம் பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மையத்தின் மேலாளர், உரிமையாளர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
அட மீடியாOct 2, 2024 - 10:45:52 AM | Posted IP 162.1*****
அது எந்த ஸ்பா? பெயர்களை வெளியிட முடியவில்லையா? அதுக்கு மக்களை முட்டாளாக்கும் இந்த குப்பை செய்தி போடாமல் இருந்துஇருக்கலாம்.
ThoothukudiOct 2, 2024 - 12:15:52 PM | Posted IP 172.7*****