» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்து அக். 7 முதல் போராட்டம் அறிவிப்பு
புதன் 2, அக்டோபர் 2024 8:10:23 AM (IST)
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து அக. 7ஆம்தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுவீன் வெளியிட்ட அறிக்கையில், "தென்காசி மாவட்டத்தில் அரசு வெளியிடும் ஆணைகளுக்கு முரணாக பணிகளில் இருக்கும் சில நடைமுறை சிக்கல்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் முகாந்திரமும் இன்றி பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்தும்,
பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் பள்ளி திறக்கும் 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவித்துள்ளனர். மாநில மையம் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாவட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.