» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாம்சங் நிறுவனத்தை கண்டித்து மறியல் போராட்டம் : சிஐடியு தொழிற்சங்கத்தினர் கைது!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:57:17 PM (IST)

தூத்துக்குடியில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்து 90 நாட்களுக்கு மேலாகியும் இனியும் இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வவலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு வை சேர்ந்த தொழிலாளிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைவர் இரா பேச்சிமுத்து தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் ஆர்.ரசல் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மாநில குழு உறுப்பினரும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ஆர் கிருஷ்ணவேணி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரா, மாவட்ட தலைவர் ஜெபராணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் காசி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டதில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 103பேரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் வழித்தடம்: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:39:41 AM (IST)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)
