» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகன் பள்ளி செல்லாததால் தாய் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்
செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:35:31 PM (IST)
தூத்துக்குடியில் மகன் பள்ளிக்கு செல்லாததால் மன வேதனை அடைந்த தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி தாளமுத்து நகர், முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் இவரது முருகேஸ்வரி (36). இந்த தம்பதியரின் 13 வயது மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஒழுங்காக பள்ளிக்கு செல்லமாட்டாராம். மேலும் வீட்டில் சேட்டை செய்வாராம்.
இதனால் முருகேஸ்வரி மகனை கண்டித்துள்ளார். ஆனாலும் மகன் திருந்தவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.