» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 3:14:44 PM (IST)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த 58 வயது நபர் படுக்கை அறையில் பரிதாபமாக  உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பூபால் ராயர் புரத்தைச் சேர்ந்தவர் சுடலை மகன் யாகப்பன் சகாயராஜ் (58), கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மது பழக்கத்திற்கு ஆளானார். 

இந்நிலையில், நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்து வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory