» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:15:56 PM (IST)



தூத்துக்குடியில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தூத்துக்குடியில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு ழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் நகரத் தலைவர் ஏஜே அருள் வளன், அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி, வடக்கு மண்டல தலைவர் சேகர், தெற்கு மண்டல தலைவர் எஸ்.தங்கராஜ், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, டிசிடியூ மாநில  செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் கோபால், மாநகர மாவட்ட பொது செயலாளர் மைக்கேல் பிரபாகரன், கண்ணன், சேகர், வார்டு தலைவர்கள் வாசி ராஜன்,  சேவியர் மிஸ்யர், ஜான் வெஸ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ரதன் கெய்னஸ் 20 வது வார்டு தலைவர்Oct 1, 2024 - 02:44:35 PM | Posted IP 162.1*****

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நண்பரே 20 வது வார்டு தலைவர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory