» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு: மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:37:07 AM (IST)
தென் மாவட்டங்களில் காவல்துறை துணையோடு கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடந்த மாதம் 23ஆம் தேதி செண்பகப்பேரி கிராமத்தில் பாண்டியராஜன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஷ்யாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் "செண்பகப்பேரியில் கடந்த 23ந்தேதி பாண்டியராஜன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கடந்த சில ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல இளைஞர்கள், எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஜாதி வெறி கொண்ட கும்பலால் கூலிப் படைகளை வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்தும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எவ்வித காரணமும் இல்லாமல் தேவேந்திர குலத்தினரை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொலைகள் நடைபெற்று வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் குறைவாக வாழும் இடங்களில் உள்ள மெஜாரிட்டியாக உள்ள மாற்று சமுதாயத்தினர், தேவேந்திரகுல வேளாளர் மக்களை அச்சுறுத்தி, அவர்களை ஊரை விட்டு காலி செய்ய வைத்து, அவர்கள் நிலங்களை அபகரிக்கும் நோக்கில் ஒரு கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஒரு கொலை நடந்ததும் பெயரளவிற்கு இரண்டு மூன்று பேர் கைது செய்யப்படுகின்றனர், ஒரு சில மாதங்களில் ஜாமில் வெளிய வந்து மீண்டும் அவர்கள் கொலை செய்வதற்கு தயாராகி விடுகின்றனர். காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை வாங்கி கொடுக்கும் அளவிற்கு செயல்பட்டால் இது போன்ற கொலைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுமா?
சென்னையில் தொடர்ந்து மூன்று என்கவுண்டர்கள் செய்தவர்கள் இங்கே ஏன் செய்யவில்லை. அதற்காக என்கவுண்டர் செய்யச் சொல்லவில்லை, முறையாக வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் தான் இது போன்ற கொலைகள் குறையும். நெல்லையில் கொலை செய்யப்பட்ட தீபக்ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இரண்டே மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
பிறகு எப்படி காவல்துறை மீது நம்பிக்கை வரும், அனைத்து கொலைகளுக்கும் காவல்துறை தான் காரணமாக இருக்கிறது, காவல்துறை துணையில்லாமல் கூலிப்படை செயல்பட முடியாது. தென் மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக கொலைச் சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தற்போது அதிகரித்து வரும் நிலை உள்ளது. அப்பாவிகள் கொலை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மக்கள் கருத்து
KumarOct 1, 2024 - 03:37:33 PM | Posted IP 162.1*****
கோயம்புத்தூரில் இருந்து கொண்டு பொழுது போகவில்லை என்றால் தென்மாவட்ட மக்களை உசுப்பேத்துவதே வேலை
RaguOct 1, 2024 - 11:24:38 AM | Posted IP 172.7*****
Who is this guy?
சரஸ்Oct 1, 2024 - 05:31:17 PM | Posted IP 162.1*****