» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மான்களை கட்டுபடுத்த கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:10:03 AM (IST)
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மான்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாய பெருங்குடி மக்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் காட்டுப்பன்றி, மான்கள் போன்ற வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.