» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் பிரகாசியம்மாள் திருவிழாவில் சப்பரப்பவனி
திங்கள் 30, செப்டம்பர் 2024 8:10:18 PM (IST)
செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயத்தில் தேர் பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். காலையும் மாலையும் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை பிராத்தனை நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி இன்று (29 ஆம் தேதி) நடந்தது.
இதற்காக இரண்டு தேர்கள் முன் செல்ல பிரகாசியம்மாள் சப்பரம் பின்னால் அணி வகுத்து சென்றது. கோயில் வளாகத்தில் இருந்து துவங்கிய தேர் பவனி, செய்துங்கநல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக கடந்து, மீண்டும் ஆர்.சி. கோயில் வளாகத்தினை அடைந்தது. அதன் பின் சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜாக்சன் அடிகளார் தலைமையில் இறை சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.