» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் நிறுவனம் சார்பில் வடிகால் தூர்வாரும் பணி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 4:34:39 PM (IST)
தூத்துக்குடியில், ஸ்பிக் நிறுவனம் சார்பில் கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் தூர்வாரும் பணியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 3வது வடிகால் முதல் 5வது வடிகால் வரை உள்ள பகுதியில் தூர் வாரும் பணியினை ஏற்று செய்து தருமாறு விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஸ்பிக் நிறுவனம் விவசாயிகள் கோரிக்கை ஏற்று மேற்கொண்ட இந்த தூர் வாரும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் ஸ்பிக் நிறுவனம் வருடா வருடம் இப்பணியை தொடரும்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், வட்டச் செயலாளரமுத்துராஜ், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், முருகவேல் மற்றும் ஸ்பிக் நிறுவன அலுவலர்கள் கிஷோர் குமார், சரவணன் உள்பட பலர் கலந்து காெண்டனர்.