» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் குழு பணத்தை கையாடல் செய்த தலைவி : ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார்!
திங்கள் 30, செப்டம்பர் 2024 4:02:51 PM (IST)
தூத்துக்குடியில், மகளிர் குழுவில் பணம் கையாடல் சம்பந்தமாக குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி முத்தையாபுரம், அய்யன் கோவில் தெரு, துர்க்கையம்மன் தாயகம் மகளிர் துணை தலைவி சண்முகலெட்சுமி மற்றும் குழுவைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், எங்களது மகளிர் குழுவில் கடந்த 2 ½ வருடங்களாக மாதம் ரூ.1000 வீதம் சந்தா கட்டி வந்துள்ளோம். பின்பு குழுவின் பெயரில் கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் HDFC வங்கியில் 17 நபரின் பெயரில், நபர் ஒருவருக்கு 1,00,000 வீதம் பெற்றுள்ளோம்.
அதில் குழுவில் உள்ள 9 நபரின் பெயரில் உள்ள பணத்தை ஏமாற்றிக் கொண்டு குழு தலைவி பாண்டி செல்வி, கணவர் ராஜேஸ், தந்தை சுப்பிரமணியன், அண்ணன் செண்பகபாண்டி தலை மறைவாகிவிட்டாள். மற்றும் குழுவின் சந்தா பணத்தையும் குழுவில் உள்ள நபரின் பெயரை பயன்படுத்தி 7பேர் பெயரில் ரூ.6,00,000 எடுத்து கொண்டு குழு தலைவி பாண்டிசெல்வி ஏமாற்றிவிட்டார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தினக்கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களுக்கு வங்கியில் இருந்து பணத்தை திருப்பி கட்ட நிர்பந்திகிறார்கள், நாங்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இவை அனைத்தும் வங்கி மேலாளர்களின் உதவியுடன் நடந்துள்ளது. தயவு செய்து குழு தலைவியை கண்டு பிடித்து எங்களுக்கு பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.