» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜமீன் கோடாங்கிபட்டியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:27:41 PM (IST)
ஜமீன் கோடாங்கிபட்டியில் ரூ.5.5 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தில், முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பதால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுகாதாரக்கேடாக இருப்பதால் பல்வேறு நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகக்கூறி கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து (2024-2025) ரூ.5.5 லட்சம் ஒதுக்கீடு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி, கவுன்சிலர் தர்மராஜ், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.