» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணை மரங்கள் எரிப்பு: அதிமுக ஊராட்சி தலைவர் மீது புகார்!

திங்கள் 30, செப்டம்பர் 2024 12:34:20 PM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணை மரங்களை எரித்து விட்டதாக அதிமுக ஊராட்சி தலைவர் மீது மூதாட்டி பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம்,  ஓட்டப்பிடாரம் வட்டம், வெள்ளைப்பட்டி, கோவில் தெருவைச் சேர்ந்த  பாக்கியம் மனைவி அந்தோணி மிக்கேல் (70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "எனக்கு வெள்ளைப்பட்டி கிராமத்தில் 1 ஏக்கர் 3 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. கடந்த மூன்று தலைமுறைகளாக பனை மரம் ஏறி, கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறோம். 

எனது கணவருக்கு வயதாகி விட்டதால் பனைத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே அந்தப் பகுதியில் உள்ள பனம்பழங்களின் கொட்டைகளை எடுத்து, அதனை விதைத்து அதன் மூலம் கிழங்கு எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். 

இந்நிலையில் கடந்த 19.09.24 அன்று மாலை சுமார் 5 மணியளவில் ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு வந்த அதிமுக கட்சியைச் சேர்ந்த கீழ அரசடி ஊராட்சித் தலைவர் தொன்மை இராயப்பன் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் என்னுடைய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து முள் வேலியையும், மரம், செடிகள் அனைத்தையும் சேதப்படுத்தி, மற்றும் அங்கிருந்த பனை மரம் உட்பட அனைத்து மரங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர். 

நான் நேரில் சென்று பார்த்த போது அனைத்து மரம், செடிகளும் சாம்பலாகி விட்டது. பனை மரம் முழுவதும் எரித்து கருகி விட்டது. மேலும் நான் அங்கு பொங்கல் பண்டிகைக்காக பயிரிட்டிருந்த கிழங்குகளையும் நாசம் செய்துள்ளார்கள். இதனால் எனது வாழ்வாதாரமே அழிந்து விட்டது. மேற்படி தொம்மை இராயப்பன் மீது பல்வேறு நில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

எங்கள் ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தையும், தனியாருக்கு சொந்தமான நிலத்தையும் ஆக்கிரமித்து தன்னுடைய உறவினர்கள், மற்றும் பினாமிகளின் பெயரில் மோசடியாக போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்கள் நிலத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் பண பலம் உள்ளவராக இருப்பதாலும், தற்போது ஊராட்சி தலைவராக இருப்பதாலும் அவரை எதிர்த்து எங்களால் செயல்பட முடியவில்லை.

எனவே மாவட்ட ஆட்சியர், என்னுடைய நிலத்தில் அத்துமீறி நுழைந்து பனை மரம் உட்பட அனைத்து பொருட்களையும் எரித்து சேதப்படுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory