» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புத்தகம் வாங்கிட உண்டியல் செய்து சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய மாணவர்கள்

புதன் 18, செப்டம்பர் 2024 4:44:42 PM (IST)



கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கிட உண்டியல் தயார் செய்து சேமிப்பு பழக்கத்தை தொடங்கி அனைவரையும் கவர்ந்தனர்.

தூத்துக்கு டிமாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆகியோரின்  ஆலோசனையின் பேரிலும்  வருகின்ற அக்டோபர் மாதம் 3.10.24 முதல் 13.10.24 வரை தூத்துக்கு மாவட்டத்தில் நடைபெறக்கூடிய புத்தகத் திருவிழாவில் பள்ளி குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தையும் தன்னுடைய சேமிப்பிலிருந்து புத்தகங்களை வாங்குவதற்கான தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக உண்டியல் செய்யும் பணிமனை ஏற்கனவே  நடைபெற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு உண்டியல் மாடல்கள் தயாரிக்கப்பட்டது.

மேலும் குழந்தைகளும் சொந்தமாக உண்டியலை தயாரித்தனர்.  தற்பொழுது அவர்கள் சேமிப்பை தொடங்கி உள்ளார்கள். இதனை முன்னிட்டு இன்று பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களைப் பாராட்டி சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படக்கூடிய பல்வேறு நன்மைகளையும்,  பயன்பாடுகளையும் தெளிவுற எடுத்துரைத்தனர். இதனை பெற்றோர்கள் பார்த்து பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூர்வாரும் பணி தீவிரம்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:33:10 PM (IST)

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory