» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா : அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிக்கை!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:29:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. 
 
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவரும், தமிழ் இனம், தமிழ் மொழி என்ற உணர்வு மிக்க கருத்துக்களை மக்களிடம் பரப்பி தமிழருக்கு பாதுகாப்பு இயக்கமாக தி.மு.கழகத்தை மாற்றி அதன் மூலம் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் அமைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா.

அவர் முதலமைச்சராக இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். அன்னாருடைய 116-வது பிறந்தநாள் வருகிற செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.  அன்றைய தினம் காலை 8:30 மணி அளவில் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி பாளைரோடு காய்கனி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா முழு உருவச் சிலைக்கு தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளரான என்னுடைய தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக அளவில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்திடவும் கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory