» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நகை கடை ஊழியர் திடீர் மாயம்.: போலீசார் விசாரணை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:08:21 AM (IST)
சாத்தான்குளத்தில் நகை கடை ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் இட்டமொழி சாலையைச் சேர்ந்தவர் ப. மணிகண்டராஜா (44). இவருக்கு ராதா என்ற மனைவியும், மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் பேய்க்குளத்தில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாள்களாக உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10ஆம்தேதி மாலை 5 மணிக்கு செல்போனை வீட்டில் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா (38) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
