» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

புதன் 11, செப்டம்பர் 2024 4:51:28 PM (IST)



தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.09.2024) பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் செய்தித்தாள், தண்ணீர் கேன், காகித அட்டை, தேங்காய் ஓடு, பலூன், களிமண் உள்ளிட்ட கைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து பல்வேறு விதமான சேமிப்பு உண்டியல்களை தயார்செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தெரிவித்ததாவது:-

நமது மாவட்டத்தில் 5வது புத்தகத் திருவிழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அதிகளவில் பங்கேற்கவுள்ளார்கள். 

இதில் பள்ளி மாணாக்கர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அன்றாட வாசிப்பு பழக்கத்தையும் மேம்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் மாணவர்களின் கைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து பல்வேறு விதமான சேமிப்பு உண்டியல்களை தயார்செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு மேற்கண்ட பொருட்களை வைத்து பலவிதமான சேமிப்பு உண்டியல்களை தயார்செய்வதற்கான பயிற்சியும் ஆசிரியர்கள் மூலமாக அளிக்கும் வகையில் இந்த பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி வாயிலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்னையிலிருந்து வருகைதந்துள்ள கைதேர்ந்த சிற்பக்கலைஞர் மூலமாகவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் 73 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். 

அந்த ஆசிரியர்கள் தங்களது பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு செய்தித்தாள், தண்ணீர் கேன், காகித அட்டை, தேங்காய் ஓடு, பலூன், களிமண் உள்ளிட்ட பொருட்களை வைத்து பல்வேறு விதமான சேமிப்பு உண்டியல்களை தயார்செய்வது குறித்து பயிற்சி அளிப்பார்கள். மேலும் மாணாக்கர்கள் தாங்கள் தயாரிக்கும் சேமிப்பு உண்டியலில் அன்றாடம் கிடைக்கக்கூடிய சிறு தொகையினை சேமித்து புத்தகத் திருவிழாவிற்கு வருகைதரும் போது தாங்கள் சேமித்த சுயசேமிப்பு தொகையிலிருந்து தங்களுக்கு பிடித்தமான கருத்துள்ள புத்தகங்களை வாங்கி வாசித்து தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர்கள் தயாரித்த சேமிப்பு உண்டியல்களை மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு வழங்கி உண்டியலில் பணம் செலுத்தி சேமிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மெட்ரிக் மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், ஓவியர் மற்றும் சிற்பக்கலைஞர் சரண்ராஜ், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:31:30 PM (IST)

கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:22:39 PM (IST)

மதுக்கடை திறப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:41:41 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory