» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுக்கடை திறப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:41:41 PM (IST)



கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வானரமுட்டி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மதுபானக்கடை அமைக்கப்படவில்லை. 

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி வானரமுட்டியில் இருந்து தோணுகால் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடையை முற்றுகையிடுவதற்காக கிராம மக்கள் திரண்டு வந்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குடியிருப்பு பகுதி அருகே எடை திறக்கப்பட்டுள்ளதாகவும், கடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் தான் பெண்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவதாகவும், டாஸ்மாக் திறக்கப்பட்டதால் பெண்கள் அப்பகுதியில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், அதிமுகவைச் சேர்ந்த அலங்கார பாண்டியன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான போலீஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

அப்போது இதுதொடர்பாக சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். அதற்கு கடை அகற்றப்படும் என உத்தரவாதம் வழங்கினால் நாங்கள் சமாதான கூட்டத்துக்கு வருகிறோம் என மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் தான் உறுதி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்திக்க வந்தனர். 

அங்கு அவர் இல்லாததால் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அலுவலகம் வந்த கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து

இது தான் திராவிட மாடல்Sep 17, 2024 - 06:10:42 PM | Posted IP 162.1*****

குடும்ப அரசியல்வாதிகள் நடத்தும் ஆலைகளுக்கும், அரசுக்குக்கும் டாஸ்மாக் பணம் வேணும்ல. அதானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory