» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது ‍: 441 மது பாட்டில்கள் பறிமுதல்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 8:24:15 PM (IST)



தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  441 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. 

தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு இன்று மது கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தூத்துக்குடி வி.ஈ. ரோடு அந்தோணியார் கோவில் அருகில் உள்ள ஒரு மதுபான கடை பார் அருகே சாக்கு முட்டையில் வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் தூத்துக்குடி இரத்தினசாமிபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த தயாளன் மகன் பியோ சாமி (49) என்பதும், சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 441 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory