» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 5:33:36 PM (IST)
இஸ்லாமாபாத்தில் நடந்த ஆசிய ஜுனியர் சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு - முத்து செல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மாணவி கௌசிகா சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது வெள்ளிப் பதக்கத்தை கனிமொழி எம்.பியிடம் காண்பித்து மகிந்தார்.