» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் செப்.16 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் : எம்பவர் இந்தியா கோரிக்கை!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 5:26:10 PM (IST)

தமிழகத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதியை ஈடு செய்யக் கூடிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்பவர் சங்கர் இது தொடர்பாக எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "மிலாடி நபி விடுமுறை நாள் செப்டம்பர் 16 திங்கள் கிழமைக்குப் பதில் செப்டம்பர் 17 செவ்வாய் கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16 ம் தேதியை ஈடு செய்யக் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தால் தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக அமையும். தமிழக அரசு இதற்கு முன்னால் பல பண்டிகை நாட்களுக்கு இது போன்று விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே தாங்கள் செப்டம்பர் 16 ம் தேதியை ஈடு செய்யக் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

RuthSep 11, 2024 - 07:17:29 PM | Posted IP 162.1*****

Plz uncle

ஆனந்த்Sep 10, 2024 - 09:27:19 PM | Posted IP 172.7*****

அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory