» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கில் 13ம் தேதி ஆஜராவேன்: சபாநாயகர் அப்பாவு

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 5:02:18 PM (IST)



அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை  வ.உ.சி விளையாட்டு அரங்கில், இன்று (10.09.2024) முதலமைச்சர் கோப்பை 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு  தொடங்கி வைத்தார். 

விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன்   தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப்,  மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்,   ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 

பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. 

எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்றார். 

இந்நிகழ்ச்சியில்,  மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பா.சிவா,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர் பேச்சியம்மாள், முக்கிய பிரமுகர் சித்திக் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory